
கடந்த முப்பது வருடகாலமாக புரையோடிப்போயிருந்த எமது இனத்தின் தேசிய நல்லிணக்கம் தற்போது எமது இலங்கைத்திருநாட்டின் “சமாதானத்தின்” தந்தை என அனைவரினாலும் ஏகமனதாக கௌரவிக்கப்படும், தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ உயர்திரு விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்கள் கடந்தகால கசப்புணர்வுகளையெல்லாம் மறந்து, முத்தான எமது இலங்கைத்திருநாட்டில் இன, மத, மொழி, குல, சாதி என்ற வரையறைகளுக்கப்பால் நின்று எமது நாட்டு மூவின மக்களையும் நல்லிணக்கப்படுத்திக் கொண்டிருக்கிற இத்தருணத்தில், அம்மான் அவர்களின் சிபார்சின் பெயரில் நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் அவ்வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட சம்பவமானது அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்படுவதோடு, நாட்டின் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின்
ஊடக செயலர் திரு. ஜூலியன்

