
எந்தக்காலத்திலும் இலங்கை இந்தியாவிடம் மண்டியிட்டதுமில்லை, இனியும் அதற்கு சந்தர்ப்பமே இல்லை, அதிலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதத்தினை ஆணிவேருடன் பிடுங்கி அழித்தொழித்து சாதனை படைத்து
இன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதியை உலகமகா தலைசிறந்த தலைவர்கள் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவிற்கு புலிகள் ஒரு பாரிய சவாலாகவே இருந்து வந்தனர், ஆனால் அப்பேற்பட்டவர்களையே அழித்தொழித்த “சூப்பர் மேன்” இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த தூக்கத்தையே நிலைகுலைய வைத்திருக்கின்றார், தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
தென்னாசியாவில் தன்னிடம்தான் எல்லோரும் எல்லாவற்றிற்கும் கையேந்தி நிற்கவேண்டும், தன்னைவிட எவரும் மிஞ்சிவிடக்கூடாதென்ற இறுமாப்பில் இருந்துவரும் இந்தியா, லேட்றஸ் ஆக தனது காய்களை இலங்கைக்குள் நகர்த்துவதற்கு தற்பொழுது கபளீகரம் செய்திருக்கும் பொரும் புள்ளிதான் கண்பதி அவர்கள்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, ஏட்டிக்குப்போட்டியான ஆலோசனைகளை “றோ” மூலியமாக கண்பதிக்கு இந்தியா தங்குதடையின்றி வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது புதிய தகவல். ஆனால் “றோ” வழங்கும் ஆலோசனைகளை கிரகித்து செயல்வடிவம் கொடுக்குமளவிற்கு கண்பதியிடம் ஆழுமை இருக்கின்றதா என்பதும், இலங்கையில் இன்னுமொரு பேரழிவிற்கு இந்தியா கண்பதியை பயன்படுத்திவிட்டு, வேலை முடிந்தவுடன் கழற்றி எறியும் உறை போல கண்பதியை கையாழப்போகின்றதா என்பதும் பொறுத்திருந்து கண்காணிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
ஆனால் கிழக்கு கண்பதியின் செயற்பாடுகளின் மாற்றங்களின் தன்மைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு, இந்த எதிர்வுகூறலை நாம் எழுதவில்லை, உள்ளிருந்து பெறப்பட்ட துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே “கண்பதி – றோ” கூட்டணியின் செயற்பாடுகள் எமக்குப் புலப்பட்டன.
கபிலன்.

