கருணா அம்மானின் அபரிதமான அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று களத்தில் செயற்படும் மக்கள் தொடர்பாளர் திரு.ரஞ்சன்.

Mr.Ranjan

தன் மக்களுக்காகவே சேவை செய்ய தன்னுயிரை தியாகம் செய்ய புறப்பட்ட ஓர் உன்னதமான மனிதன், தமிழ் இணத்தையே அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளுக்காவும் அன்றிலிருந்து இன்றுவரை போராடிக்கொண்டிருப்பவர் அவர் தான் எம் தமிழ் மண்ணின் மைந்தன் கருணா அம்மான். அன்று தன்னுயிரை பற்றி கவலைப்படமால் களத்தில் நின்று தன் பேராளிகளுக்கு கட்டளையிட்ட கேணல் கருணா அம்மான் அவர்கள் இன்று அதே மக்களுக்காக சேவை செய்வதற்க்காக அரசியல் களத்திள் நின்று போராடிக்ககொண்டிருக்கிறார். இதெல்லாம் யாருக்காக தன் குடும்பத்திற்காகவா அல்லது சுயநலத்திற்காகவா ? இல்லவே இல்லை.. அன்று கருணா அம்மானை நம்பிருந்த தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காக.. ஒவ்வொருவரின் வெற்றிப்பாதைக்குப்பின்னும் யாராவது ஒருவர் இருப்பார்கள் அந்த வகையில் எமது கருணா அம்மானுக்கு அன்றும் இன்றும் பக்கபலமாக வெற்றிப்படிக்கற்களாக உறுதுனையாக நிற்ப்பவர்கள் பலர் அதில் அம்மான் அவர்களின் மக்கள் தொடர்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமாகிய ரஞ்சன் என அழைக்கப்படும் துரையப்பா ஆனந்தராஜா இவர் அன்று தன் சிறு வயதிலே மக்களுக்கவே போராடச் சென்றவர். அப் போராட்டமே மக்களை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதை கண்டு ஆவேசப்பட்டு கருணா அம்மானுடன் சேர்ந்து வெளியேறினார். இவர் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியில் கருணா அம்மானுடன் இணைந்து அவருக்கு பக்கபலமாக நின்று செயற்பட்டுக்கொண்டுவருகின்றார். தன் உடம்பில் எதிரியின் குண்டுகள் பாய்ந்தபோதிலும் தன் உயிரை பணயமாக வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவைசெய்துகொண்டுவருகின்றார். இன்று கருணா அம்மானுடன் ரஞ்சனை போன்ற பலர் மக்களுக்கு சேவைசெய்துவரும் இவ்வேளையில் சிலரின் தவறான செயற்பாடுகளினால் இவர்களை போன்ற நல்ல எண்ணம் நிறைந்தவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. குறிப்பாக தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சிறுதூசு கூட சம்பந்தபடாத சில புலம்பெயர் புலிப்பிணாமிகள் இவர்களுக்கெதிராக பல்வேறுபட்ட சதிவேளைகளை செய்துகொண்டு வருகிறார்கள். புலிப்பெயரில் உழைத்த பணத்தில் உறங்கிக் கொண்டு தனிஈழம் என்று புழைப்பு நடத்தும் புலம்பெயர் புலிகளின் மத்தியில் உயிர் தமிழுக்கு உடல் மண்னுக்கு என்று அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களுக்கு எந்த வகையில் உரிமைகள் கிடைக்குமோ அந்த வகையில் செயற்பட்டுக்கொண்டு வரும் கௌரவ கருணா அம்மானின் ரஞ்சன் அவர்களும் அவர்போன்றாரும் போற்றத்தக்கவர்கள். இதேவேளை கொடியவர்களின் ஆதிக்க பிடியிலிருந்து கிழக்கு மண்னை மீட்க்கும் போரில் வீரச்சாவடைந்த ரெஜி, இசையாளன், கெஸ்ரோ, குகனேசன், துமிலன், வண்ணாளன் போன்ற மாவீரர்களின் தியாகத்தையும் நாம் இந்நிமிடத்தில் நினைவுகூறுவோம். இவர்கள் யாருக்காக இறந்தார்கள் தன் குடும்பத்திக்காகவா? இல்லை… 30 வருட காலமாக இழந்த பெறுமதிமிக்க உயிர்களுக்காக இனிமேலும் ஒரு உயிர் இம் மண்னில் வீணாக இழக்ககூடாதென்பதற்காக. இன்று கிழக்கு மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் குகணேசன் போன்றோர் செய்த தியாகங்களும் ரஞ்சன் போன்றோர் செய்துவரும் தியாங்களுமே. இதே தியாங்களும் சேவைகளும் விரைவில் வட மண்ணின் மீதும் பதியும். ஆகவே தமிழ் மக்களே ! எமது உரிமைகளை மற்றவர்கள் தட்டிச்செல்லமுன் உறுதியான தலைமைத்துமிக்க கருணா அம்மனின் ஜனநாயக வழி சென்று எமது உரிமைகளையும் உறவுகளையும் காப்போம்.

புளியந்தீவான்.

Advertisement
Follow

Get every new post delivered to your Inbox.