உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடும் சிறைக்கைதிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென விசேடகுழு நியமனம்-

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடும் கைதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டத் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோவின் தலைமையின்கீழ் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு குறப்பிட்டுள்ளது.

இந்தக் குழுவின் விசாரணை அறிக்கையின்மூலம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடிவதுடன், அவசரகால சட்டத்தின்கீழ் கடந்த இரு மாதங்களில் 59கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவின் விசாரணைகளின் பின்னர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரின் அனுமதியின்பேரில் சிறையிலுள்ள கைதிகள் சிலரை விடுவிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


Advertisement
Follow

Get every new post delivered to your Inbox.