நிரந்தர நியமனம்கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் மகஜர் கையளிப்பு-

தம்மை பணியில் நிரந்தரமாக்கும்படி கோரிக்கை விடுத்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று மாகாணக் கல்விச் செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். மூன்று வருடங்களுக்கும் மேலாக தாங்கள் கிழக்கு மாகாணத்தின் கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் பணியாற்றி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

200ற்கும் மேற்பட்டோர் தொண்டர் ஆசிரியர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்றனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உபுல் வீரவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த தொண்டர் ஆசிரியர்களின் மகஜரை தாம் ஏற்றுக் கொண்டதாகவும், அத்துடன் அதனை மாகாணக் கல்வியமைச்சரிடம் சமர்ப்பித்து அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Follow

Get every new post delivered to your Inbox.